Posts

கல்லறை கட்ட மனமில்லை

உயிரே உனக்கு முன்        இறக்க துடிக்கின்றேன் - எனக்கு கருவறை கொடுத்த  உன்னக்கு         கல்லறை கட்ட மனமில்லை.....                                                                 

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

கடந்து வந்த பாதை பெரிதல்ல, அதில் நீ கடந்து சென்ற தருனங்கள் தான் அரிது. நினைக்க முடியாத அளவு காதல், அதில் மறக்க முடியாத நினைவு, உன் பிறிவு. உன்னுடன் இருந்த நிமிடங்கள் அவ்வளவு அழகு, சொல்ல என்னிடம் மொழி இல்லை - உயிரே உன்னை இழந்த நொடி மட்டும், இன்னமும் வலிக்கிறது. இவ்வளவு வலி இருக்கும் என தெரிந்திருந்தால், அன்றே பிரியாமலிருக்க ஏதேனும் வேறொரு வழியில் கஷ்டபட்டாவது உன்னை அழைத்து வந்திருப்பேன். என் நினைவுகள் உனக்கு இருக்குமா? இல்லாமல் இருக்குமோ? என நினைத்து நான் நேரம் கடத்தவில்லை, என்னால் முடியும் போலுதெல்லாம் உன் நினைவுகளை அசைபோட்டு, உன்னிடம் மன்னிப்பும் காதலும், சொல்லி சொல்லி இளைப்பாறி கொள்கிறேன், நீ நம்ப வேண்டும் என எழுதவில்லை, என்னால் மறக்கவும் மறைக்கவும் முடியாமல்    இறுதியாய் எழுதுகிறேன், நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன். -சுயநலத்துடன் சையது... (படிக்க மட்டுமே, பகிர வேண்டாம்)

சிற்பி

நிலவில் ஒளி எடுத்து, அவள் முகம் வரைந்து. இரவிடம் நிழல் எடுத்து, விழிக்கு மையிட்டு. செவ்வானம் பிரதி எடுத்து, மேனிக்கு வண்ணமிட்டு, பாலில் ஆடை எடுத்து, பாவையின் பல் செய்து. தென்னையில் பூவை போல், என் தேவதைக்கும் பூவைத்து சிலை செதுக்கி பார்த்தேனடி, அழகே, சிறிதும் உனக்கது இனையில்லை... உன் அன்னை போல் வேறு நல்ல சிற்பியும் இல்லை. -சையது ஹசேன்...

வேலையில்லா பட்டதாரி

விடியற்காலை வரிசையில் நின்றான்  பால் வாங்க அல்ல  படிக்க தாள் வாங்கவும் அல்ல  படித்து வாங்கிய பட்டங்கள் கையுடன்  பிடித்துகொண்டு  பிள்ளை போல்  நின்றான்.   விடிந்த பின்பும் கதிரவன்  வந்தும்,  விடியலை தேடி வேலைக்காக  நின்றான், அழைப்பு  வந்தது இவன்ப்பெயர்  கூவி,  அடியெடுத்து   வைத்தான்  அலுவலரை நோக்கி,        கேள்விகள் தொடர்ந்தன, பதில்களும் பறந்தன, கேட்ட கேள்விகளுக்கு  பொருத்தமான பதில்கள், கேட்டவர் மனதிற்கு போதுமான விடைகள்,  வேலை கிடைத்திடும்  நம்பிக்கை இவனுக்கு, வேலை அளித்திடும்  எண்ணம் அவருக்கு , தீர்ப்புக்கான நேரம் வந்தது , கனவுகள் நிஜமாகும்  காலமும்  வந்தது, அனுமதி கடிதம் அலுவலர் கொடுக்க, அதை வாங்கிட இவனும் முன்னால் நடக்க, மகனே என்று அன்னை அழைக்க, அதிர்ந்து இவனும் பின்னல் பார்க்க, அடடா..! யார் செய்த பாவமோ, இவன் கனவில் கூட இன்னும்  வேலையில்லா   பட்டதாரி..

இலாபம்

Image
கோபத்தின்  இலாபம்  நஷ்டம் , காதலின்  இலாபம் கஷ்டம் , துரோகத்தின்  இலாபம்  பாவம் , நஷ்டத்தின்  இலாபம்  அனுபவம் ... - சையது ஹசேன் ...

அவள்-அவன்

Image
அவள் : உன்னிடம் பேசமாட்டேன் போ ... அவன் :அப்படியா ? முதலில்  உன் கண்களை முடிக்கொள் ஏன் தெரியுமா? உன் உதடுகளைவிட இமைகள்தான் அதிகம் கவிபடுகின்றன .... -சையது 

பின் ஜென்மம்

Image
முன்  ஜென்மத்தில் நான்  செய்த  பாவத்திற்கு கடவுள்  எனக்கு கொடுத்த  நரக தண்டனை தான்   காதல் ... பாவம்... கடவுளுக்கு தெரியாது  அவள் நினைவுகள் தான்  என் சொர்க்கம் என்று ... - சையது