Skip to main content

அம்மா - சொர்க்கம்

இருக்கும் போது அருமை அறியல

இழந்த வலி இன்னும் குறையல


பால் குடுத்த, சோறு ஊட்டுன , புத்தி சொன்ன

ஆனா வாழும் போது பாக்காம போய்ட 


பெத்த கடன வாங்காம போனியா 

இல்ல, புள்ள கடன் பட கூடாதுனு விட்டுட்டு போனியா


என் மகளா நீ பிறந்துட்டனு மனச தேத்துக்கிட்டாலும் , 

மனசெல்லாம் உன் நினைப்பு வந்து வந்து போகுது


அம்மாவின் காலடியில் மட்டுமா சொர்க்கம்

அம்மாவின் கையால் அடிவாங்கியதும் சொர்க்கம்

தாய் மடியில் தலைசாய்த்து தூங்கும் போதும் சொர்க்கம்

அம்மாவிற்கு பெருமை சேர்ப்பதில் சொர்க்கம் 

அம்மா ...... சொர்க்கம்.....

Comments