இருக்கும் போது அருமை அறியல இழந்த வலி இன்னும் குறையல பால் குடுத்த, சோறு ஊட்டுன , புத்தி சொன்ன ஆனா வாழும் போது பாக்காம போய்ட பெத்த கடன வாங்காம போனியா இல்ல, புள்ள கடன் பட கூடாதுனு விட்டுட்டு போனியா என் மகளா நீ பிறந்துட்டனு மனச தேத்துக்கிட்டாலும் , மனசெல்லாம் உன் நினைப்பு வந்து வந்து போகுது அம்மாவின் காலடியில் மட்டுமா சொர்க்கம் அம்மாவின் கையால் அடிவாங்கியதும் சொர்க்கம் தாய் மடியில் தலைசாய்த்து தூங்கும் போதும் சொர்க்கம் அம்மாவிற்கு பெருமை சேர்ப்பதில் சொர்க்கம் அம்மா ...... சொர்க்கம்.....
சிரிக்க , சிந்திக்க பேசினான் "நல்ல கோமாளி" என்றார்கள் பைசா தேறவில்லை... புலம்பி தள்ளினான் "சுவாமி ஜி" என்றார்கள் இப்போது நல்ல வருமானம்... -Syed hassain 10/march 26