நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

கடந்து வந்த பாதை பெரிதல்ல,
அதில் நீ கடந்து சென்ற தருனங்கள் தான் அரிது.

நினைக்க முடியாத அளவு காதல்,
அதில் மறக்க முடியாத நினைவு,
உன் பிறிவு.

உன்னுடன் இருந்த நிமிடங்கள்
அவ்வளவு அழகு,
சொல்ல என்னிடம் மொழி இல்லை - உயிரே உன்னை இழந்த நொடி மட்டும்,
இன்னமும் வலிக்கிறது.

இவ்வளவு வலி இருக்கும் என தெரிந்திருந்தால்,
அன்றே

பிரியாமலிருக்க ஏதேனும் வேறொரு
வழியில்
கஷ்டபட்டாவது உன்னை
அழைத்து வந்திருப்பேன்.

என் நினைவுகள் உனக்கு இருக்குமா? இல்லாமல் இருக்குமோ?
என நினைத்து நான் நேரம் கடத்தவில்லை,

என்னால் முடியும் போலுதெல்லாம்
உன் நினைவுகளை அசைபோட்டு, உன்னிடம்

மன்னிப்பும் காதலும்,
சொல்லி சொல்லி
இளைப்பாறி கொள்கிறேன்,


நீ நம்ப வேண்டும் என எழுதவில்லை,

என்னால் மறக்கவும் மறைக்கவும் முடியாமல்    இறுதியாய் எழுதுகிறேன்,

நான் இன்னும்,
இன்றும்,
உன்னை காதல் செய்கிறேன்.


-சுயநலத்துடன்

சையது...

(படிக்க மட்டுமே, பகிர வேண்டாம்)

Comments

Post a Comment

Popular posts from this blog

சிற்பி

பின் ஜென்மம்